சேமிப்பு கிடங்குகளில் தானிய பாதுகாப்பு


தானிய  பாதுகாப்பு

தானியங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான வழிமுறைகள்

  1. தானியங்களை அறுவடையில் நன்றாக உலர்த்தி ஈரப்பதம் 8 முதல் 10 சதத்திற்கள் இருக்குமாறு செய்து சேமிக்க வேண்டும்
  2. தானியங்களை சேமிக்கும் குதிர்கள் மற்றும் அறைகளை நன்றாக சுத்தம் செய்து எந்தவித பூச்சிகள் மற்றும் அதன் வாழ்க்கைப் பருவங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  3. நவீன சேமிப்புக் களஞ்சியங்களை உபயோகித்தல், குறிப்பாக உலோக குதிர்கள் சிறு விவசாயிகளுக்கு தானியங்களை சேமித்து வைத்துக்கொள்ள சிறந்த சாதனமாக விளங்குகிறது.
  4. தானிய மூட்டைகளை தரையில் வைக்காது கட்டைகள் மற்றும் மூங்கில் பாய்களின் மீது அடுக்க வேண்டும்
  5. மூட்டைகள் கவற்றை ஒட்டி இல்லாமல் தனித்தனியாக, அடுக்கடுக்காக, நல்ல இடைவெளி விட்டு காற்றோட்டமாக வைக்கவேண்டும்.
  6. தானியக் கதிர் அடிக்கும் களங்கள், சேமிப்பு அறைக்கு தள்ளி இருப்பதுடன், எந்தவித தூசும், மாசும் இல்லாமல் இருக்க வேண்டும்.
  7. தானிய சேமிப்புக்கு பயன்படுத்தப்படும்  சாக்குப்பைகள் புதியதாக அல்லது பூச்சியற்றதாக இருக்க வேண்டும். பழைய சாக்குப்பைகளை மாலத்தியான் அல்லது டைகுளோர்வாஸ் 0.1 சதக் கரைசலில்  நனைத்து உலர்த்திப் பின் உபயோகிக்கலாம்.
  8. மூட்டைகளின் மீது  மாலத்தியான் 0.1 சதம் கரைசலை மூட்டை நனையாமல். தானியங்கள் மேல் படாமல் அளவாக தெளித்து வரலாம்
  9. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்டு பரிந்துரை செய்யப்படுகின்ற ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை விதைகளுக்குக் குறிப்பாக பயறுவகைப் பொருட்களுடன் 1:100 என்ற விகிதத்தில் (எடைக்கு எடை) கலந்து வைப்பதால் பூச்சிகள் வராமல் காப்பாற்றலாம்.
  10. பயறு வகைகளான துவரை, உளுந்து, பாசிப்பயறு முதலியவற்றை வேப்பம் மற்றும் உணவு எண்ணெய்களுடன் கலக்கி வைப்பதன் மூலம் (1:100 எடைக்கு எடை என்ற விகிதத்தில்) பயறு வண்டு தாக்குவதை கட்டுப்படுத்தலாம். இதைத்தவிர வேப்பங்கொட்டை தூளை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் உபயோகித்து பயன்பெறலாம்.
  11. பூச்சிகள் மூட்டையினுள் காணப்பட்டால் அவற்றை அலுமினியம் பாஸபைடு மாத்திரையிட்டு (டன்னுக்கு மூன்று மாத்திரை விதம்) பாலித்தீன் உறைகளால் மூடி 5 நாட்களுக்கு விஷப் புகையிட்டு வைப்பதன் மூலம் அழிக்கலாம். பொதுவாக இந்த முறை பொதுமக்கள் வசிக்கும் இடங்களிலிருந்து  தள்ளியுள்ள தானியக் கிடங்குகளிலும் அரசுதானியக் கிடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கிராமங்களிலும் நகரங்களிலும் விவசாயிகள் பொதுமக்கள் இதைப்பயன்படுத்த சிபாரிசு செய்யப்படுகின்றன.

தாவரப்பொருட்கள் :
தானியங்களில் பைரித்திரம், வேப்பம் விதை பவுடர், வேம்பின் இலை முதலிய, சேமிக்கப்படும் பொருட்களில் உற்பத்தியாகும் பூச்சியினங்களைக் கொல்லக் கூடியவாய்ந்தவை. இவை மட்டுமின்றி தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அகிய தாவர எண்ணெய்களையும் பயன்படுத்தலாம். இவைகளை 1:100 என்ற விகிதத்தில் (எடைக்கு எடை) உபயேரிக்கலாம்.
இ.மூட்டைகளின் மீது வெப்பம் மூட்டுதல்
தானியங்களை சாக்கு மூட்டைகளில் சேமித்து வைக்கும் போது சாக்குகளின் மேல் கீழ்கண்ட மருந்துகளை தெளித்தல் அவசியம்.

 

பூச்சிக்கொல்லி

அளவு

1. மாலத்தியான 50 ஈ.சி. 10மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர்   கலந்து 3 லிட்டர் கலவையை 100 சது.மீ. பரப்பில் தெளித்தல்
2. டைகுளோர்வாஸ் 76 எஸ்.சி. 7 மி.லி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 3 லிட்டர் கலவையை 100 சது.மீ. பரப்பில் தெளித்தல்

இடைவெளிகளில் உபயோகப்படுத்த :

அடுக்கப்பட்ட மூட்டைகளின் இடவெளிப்பகுதியிலும்  சேமிப்பு அறையின் கதவு, சுவர்கள் ஆகியவைகளிலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பூச்சிகள் நடமாட்டம் அறிந்து உடனே அவசியம் தெளிக்க வேண்டும்.

  பூச்சிக்கொல்லி அளவு
1. மாலத்தியான 50 ஈ.சி. 10 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர்
2. டைகுளோர்வாஸ் 76 எஸ்.சி. மேற்கூறப்பட்ட கலவையில் ஒரு லிட்டரில் 270 கனமீட்டர் (அ) 10,000 அடி அளவு இடத்தில் தெளிக்க வேண்டும்

பூச்சிகளின் தாக்குதல் வந்தபின் பாதுகாப்பு முறைகள் :

மூட்டைகள் அடுக்கப்பட்ட சேமிப்புகிடங்குகளுக்கு
சேமிப்புக்கிடங்களில் அடுக்கப்பட்ட மூட்டைகளும் பூச்சிகள் இருக்கிறதா என்பதை 15 நாட்களுக்கு ஒரு முறை கண்காணிக்க வேண்டும். 1 கிலோ தானியத்தை எடுத்து அதில் பூச்சிகள் உள்ளனவா என்பதை கவனிக்க வேண்டும். கீழ்க்கண்ட அட்டவணை கொண்டு சேத அளவை தெரிந்து கொள்ளவும்.
ஒரு கிலோ விதைகளுக்கு
1. பூச்சிகள் இல்லை
2. 2 பூச்சிகள்                                                  சாதாரண சேதம்
3. 2 பூச்சிகளுக்கு மேற்பட்டால்                               அதிக சேதம்
இகைளைக் கட்டுப்படுத்த நச்சு வாயு பூச்சிக்கொல்லிகளை கிடங்கு முழுவதும் அல்லது கிடங்கில் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ள சில பகுதிகளில் தார்பாலின் கொண்டு மூடி நச்சு வாயு செலுத்தலாம். பூச்சிகளின் சேதத்தை பொறுத்து கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
அலுமினியம் பாஸ்பைடு
அ). உறைகள் இட்டு மூடி பாதுகாத்தல் - 3 மாத்திரைகள் ஒர் டன் அளவு தானியத்திற்கு ( கிடங்கின் மூட்டைகள் அடுக்கப்பட்ட சில பகுதி மட்டும்)
ஆ). சேமிப்பு கிடங்கு முழுவதும் - 21 மாத்திரைகள் - 28 கன மீட்டர்  அளவிற்கு
மேற்கூறப்பட்ட முறையில் 5 நாட்கள் வரை நச்சுடிப் புகை வெளியேராமல் மூடிவைக்க வேண்டும்
வீட்டில் சேமிக்கும் தானியங்களுக்கு பாதுகாப்பு
வீடுகளில் குறைந்த அளவு சேமித்து வைக்கப்படும். தானியங்கள் மற்றும் விதைகளைப் பூச்சிகள் தாக்காவண்ணம் தடுக்க மினிபீயும் () என்ற வில்லைகளை ஒர் குவிண்டாலுக்கு ஒரு வில்லை வீதம் உபயோகிக்கலாம்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013